வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்பு சங்க கூட்டம்
நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்புச் சங்க நிர்வாக குழு கூட்டம் நெல்லையில் நடந்தது.
நெல்லை வியாபாரிகள் முன்னேற்ற பாதுகாப்புச் சங்க நிர்வாக குழு கூட்டம் நெல்லையில் நடந்தது. தலைவர் முகமதுயூசுப் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாராயணன், கான்முகமது, முகமது அனிபா, சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஆதிமூலம் வரவேற்றார். கூட்டத்தில் ஒடிசாவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் நடைபெறும் பணிகளை மழைக் காலத்துக்குள் முடித்து சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தென்காசி நோக்கி செல்லும் நான்கு வழிச்சாலைகள் மற்றும் குற்றாலம் ரோடு, நயினார் குளம் ரோட்டை உடனே சரிசெய்ய வேண்டும். சந்திப்பு பஸ்நிலையத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிக கல்வி கட்டணம் வாங்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்களை வணிகர்கள் விற்பனை செய்ய வேண்டாம். ஜூலை 2-ந் தேதி நடைபெறும் நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் தேரை ஒரே நாளில் நிலையம் சேர்க்க வேண்டும் இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் ஜவகர் நன்றி கூறினார்.