தொடர் மழையால் வியாபாரிகள், வாகன ஓட்டிகள் பாதிப்பு


தொடர் மழையால் வியாபாரிகள், வாகன ஓட்டிகள் பாதிப்பு
x

தொடர் மழையால் வியாபாரிகள், வாகன ஓட்டிகள் பாதிப்பு அடைந்தனர்.

கரூர்

கரூர் மாவட்டம் நொய்யல், குறுக்கு சாலை, அத்திப்பாளையம், குப்பம், உப்புப்பாளையம், குந்தாணி பாளையம், நத்தமேடு, புன்னம்சத்திரம், புன்னம், பசுபதிபாளையம், பழமாபுரம், மூலிமங்கலம், கொங்குநகர், மரவாபாளையம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை, கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், பாலத்துறை, நன்செய்புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல் நேற்று மதியம் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த பழக்கடைகள், பலகாரகடைகள், சிற்றுண்டி கடைகள், துணிக்கடைகள், பூக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். அதேபோல் சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகளும் மிதமான மழையில் நனைந்து கொண்டு சென்றனர். மேலும் நடந்து சென்ற கூலி தொழிலாளர்களும் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக வியாபாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் பாதிப்படைந்தனர். நீண்ட இடைவெளிக்கு பின் தொடர்மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story