மாடுகளை வாமாடுகளை வாங்காத அதிகாரிகள் மீது வியாபாரிகள் அதிருப்திங்காத அதிகாரிகள் மீது வியாபாரிகள் அதிருப்தி


மாடுகளை வாமாடுகளை வாங்காத அதிகாரிகள் மீது வியாபாரிகள் அதிருப்திங்காத அதிகாரிகள் மீது வியாபாரிகள் அதிருப்தி
x
தினத்தந்தி 6 Sept 2023 12:45 AM IST (Updated: 6 Sept 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

அரசின் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு வழங்க மாடுகளை வாங்காமல் செல்லும் அதிகாரிகள் மீது வியாபாரிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

கோயம்புத்தூர்
பொள்ளாச்சி


அரசின் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு வழங்க மாடுகளை வாங்காமல் செல்லும் அதிகாரிகள் மீது வியாபாரிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.


பொள்ளாச்சி சந்தை


பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழ மைகளில் மாட்டு சந்தை நடைபெறுகிறது. சந்தைக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படு கின்றன. மாடுகளை பெரும்பாலும் கேரளாவிற்கு இறைச்சி தேவைக்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.


இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வேளாண்மை துறை அதிகாரிகள், கால்நடை துறைகளை உள்ளடக்கிய அதிகாரிகள் பேனருடன் வருகிறார்கள். அந்த பேனரில் வேளாண்மை துறை ஒருங்கிணைந்த பண்ணை யம் கறவை மாடு கொள்முதல் என்றும், எந்த ஒன்றியம், தேதி போன்ற விவரங்கள் உள்ளன.


வியாபாரிகள் அதிருப்தி


பின்னர் அவர்கள் பயனாளிகள் என்று அழைத்து வருபவரை மாடுகள் முன் நின்று புகைப்படம் எடுக்கிறார்கள். அதன்பிறகு அதிகாரிகள் மாடுகளை வாங்காமல் செல்வதால் வியாபாரிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.


இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-


கடந்த சில வாரங்களாக சந்தைக்கு வேளாண்மை துறை, தோட்டக் கலைத்துறையின் பேனரை கொண்டு வருகின்றனர். பின்னர் குழுவாக நின்று மாடுகளை நிறுத்தி புகைப்படம் எடுக்கின்றனர். அந்த பேனரில் கறவை மாடு கொள்முதல் என்றும், தோட்டக்கலை துறை பேனரில் மானாவாரி திட்டம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.


மாடுகள் வாங்குவதில்லை


ஆனால் சந்தைக்கு வரும் அதிகாரிகள் யாரும் மாடுகளை வாங்க வில்லை. இது குறித்து கேட்டால் மாடுகளை வாங்க வந்து இருப்ப தாக கூறுகின்றனர். இதனால் அரசின் திட்டத்தில் ஏதோ முறைகேடு நடப்பதாக தெரிகிறது.


எனவே உயர் அதிகாரிகள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும் புகைப்படம் எடுப்பதற்காக மட்டும் இனி அதிகாரிகள் யாரும் சந்தைக்கு வரக் கூடாது. மாடுகளை வாங்குவதாக இருந்தால் மட்டுமே சந்தைக்கு வர வேண்டும்.


இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


மாடுகள் தேர்வு


இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-


தோட்டக்கலைத்துறை மூலம் மானாவாரி திட்டத்திலும், வேளாண்மை துறை மூலம் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்திலும் விவசாயிகளுக்கு கறவை மாடுகள் ரூ.15 ஆயிரம் மானியத்தில் வழங்கப்படுகிறது.


இந்த திட்டத்தில் மாடுகளை தேர்வு செய்வதற்கு சந்தைக்கு விவசாயிகளை அழைத்து சென்று புகைப்படம் எடுக்கப்படுகிறது. மேலும் எந்த மாதிரியான மாடுகளை வாங்க வேண்டும் என்று கால்நடைத்துறை மூலம் அறிவுரை வழங்கப்படுகிறது. அதன்பிறகு விவசாயிகள் தேர்வு செய்யும் மாடுகளை வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story