வியாபாரிகள் சங்க ஆண்டு விழா


வியாபாரிகள் சங்க ஆண்டு விழா
x

வள்ளியூரில் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் வியாபாரிகள் சங்க 90-வது ஆண்டு விழா, மகாசபை கூட்டம் வள்ளியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் முருகன் தலைமை தாங்கினார். உதவி தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். செயலாளர் ராஜ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ஜோவின் பார்ச்சுனேட் வரவு-செலவு கணக்கை வாசித்தார். சங்க தணிக்கையாளர் சீராக் இசக்கியப்பன் கணக்கு தணிக்கை அறிக்கையை வாசித்தார்.

விழாவில் சங்க நிர்வாகிகளின் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் 10, 12-ம் வகுப்பு தேர்வில் முதல், 2-வது மதிப்பெண்கள் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு, கேடயம் வழங்கப்பட்டது. விழாவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் அருணா, பாலமுருகன், சிதம்பரகுமார், ஜீவா, கணேசன், கார்த்தீசன், செலின், ராஜேந்திரன், சேதுராமலிங்கம், சுரேஷ், சங்கரன், ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், உதவி செயலாளர் காதர்மைதீன் நன்றி கூறினார்.


Next Story