வியாபாரிகள் நலச்சங்க கூட்டம்
நெல்லை டவுன் வியாபாரிகள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது.
நெல்லை டவுன் வியாபாரிகள் நலச்சங்க நிர்வாகக்குழு கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் ஸ்டீபன் பிரேம் குமார் தலைமை தாங்கினார். பொருளாளர் மீரான், துணைத்தலைவர் இம்மானுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் வெங்கட்ராமன் வரவேற்றார்.
கூட்டத்தில் நெல்லை மாநகர பகுதியில் சேதம் அடைந்த சாலைகளை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைத்து தர வேண்டும். மணிப்பூர் சம்பவத்தை கண்டிப்பதுடன், பிரதமர் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து தீர்வு காண வேண்டும். வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி சங்க அலுவலகத்தில் சுதந்திர தின கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாட வேண்டும். நெல்லையப்பர் கோவில் ஆனிப்பெருந்திருவிழா தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றதற்கும், ஒரே நாளில் தேர் நிலையம் சேர்த்து பாதுகாப்பு வழங்கிய போலீசாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் துணை செயலாளர்கள் முருகன், பகவதி ராஜன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தர்மராஜ், செல்லச்சாமி, பதுரு ஜமான், முகமதுஅலி சித்திக், சேது ராமச்சந்திரன், ரவி, மனோகர், ஓம் சரவணன், இளங்கோ, ரதீஸ், முத்து சிவன் உள்ளிட்டர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாக குழு உறுப்பினர் கான் முகமது நன்றி கூறினார்.