விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல் விதைகள்
விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல்விதைகள் வினியோகம் செய்யப்பட உள்ளது.
விவசாயிகளுக்கு மானிய விலையில் பாரம்பரிய நெல்விதைகள் வினியோகம் செய்யப்பட உள்ளது.
பாரம்பரிய நெல் ரகங்கள்
தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து மீட்டெடுக்கவும், பாரம்பரிய நெல் வகைகளின் மருத்துவ முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகங்களின் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பாரம்பரிய நெல் ரக விதைகள் வேளாண்மை துறை மூலம் வினியோகிக்கப்பட உள்ளது.
விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல்லிதைகளை வினியோகம் செய்ய ஏதுவாக விருதுநகர் மாவட்டம் தேவதானம் அரசு விதைப்பண்ணையில் ஆயிரம் கிலோ மாப்பிள்ளை சம்பா மற்றும் 3,500 கிலோ சிவப்பு கவுணி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய ஏதுவாக அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
அரசு மானியம்
பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா மற்றும் சிவப்பு கவுணி விற்பனை விலையான கிலோ ரூ.50-ல் 50 சதவீதம் அரசு மானியத்தில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது.
விவசாயி ஒருவருக்கு ஏக்கர் ஒன்றுக்கு அதிகபட்சமாக 20 கிலோ வரை அரசு மானியத்தில் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி பயனபெறலாம். மேற்கண்ட தகவலை வேளாண்மை துறை இணை இயக்குனர் (பொறுப்பு) பத்மாவதி கூறினார்.