4 இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


4 இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 30 July 2023 2:30 AM IST (Updated: 30 July 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் 4 இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர்.

நீலகிரி

குன்னூர்

நீலகிரி மாவட்டத்தில் 4 இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர்.

மண்ணில் ஈரத்தன்மை

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழையின் தாக்கம் சற்று குறைந்து இருந்தது. ஆனாலும், கடந்த ஒரு வாரமாக பெய்த மழை காரணமாக மண்ணில் ஈரத்தன்மை அதிகமாக இருப்பதாலும், சூறாவளி காற்று வீசுவதாலும் ஆங்காங்கே மரங்கள் விழுந்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் எல்லநள்ளி ரெயில் நிலையம் அருகே பெரிய மரம் ஒன்று விழுந்தது. சாலையிலும், தண்டவாளத்திலும் மரம் விழுந்தது கிடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிப்பு

இதைத்தொடர்ந்து குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினர். இதேபோன்று ஊட்டியில் இருந்து வி.சி. காலனி செல்லும் சாலையிலும் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான வீரர்கள் வெட்டி அகற்றினர். மேலும் ஒரு சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது.

இது தவிர பந்தலூரில் இருந்து கொளப்பள்ளி செல்லும் சாலையிலும், பாட்டவயலில் இருந்து அய்யன்கொல்லி செல்லும் சாலையிலும் மரம் விழுந்தது. இதை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.


Next Story