கரும்பு சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு


கரும்பு சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x

கரும்பு சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலை வழியாக இன்று காலை கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் மேல்தெரு பகுதியில் சென்றபோது அதிக பாரம் தாங்க முடியாமல் டிராக்டரில் இருந்த கரும்பு கட்டுகள் கீழே சரிந்து நடுரோட்டில் விழுந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் டிராக்டர் டிரைவர், அந்த கரும்பு கட்டுகளை சாலையோரமாக அப்புறப்படுத்திவிட்டு சென்றார். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

1 More update

Next Story