கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கர்நாடகா மாநிலத்திற்கு சுமார் 76 மீட்டர் நீளத்தில் காற்றாலை விசிறியின் இறக்கையை நீளமான லாரியில் ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் வழியாக வந்தது. தவிட்டுப்பாளையம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் குறுகிய அளவிலான சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மிகவும் நீளமான இறக்கையை லாரியில் கொண்டு சென்றதால் இறக்கையை ஏற்றி செல்லும் லாரிக்கு பின்னால் வரும் அனைத்து வாகனங்களும் லாரியை முந்திச் செல்ல முடியாமல் லாரியின் பின்னால் அணிவகுத்து சென்றது. இதனால் நீண்ட நேரம் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து இறக்கை ஏற்றி சென்ற லாரிக்குபின்னால் சென்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாலத்துறை முதல் தவிட்டுப்பாளையம், பரமத்தி வேலூர் வரை ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து சென்றன.