கோவை ரேஸ்கோர்சில் இன்று போக்குவரத்து மாற்றம்


கோவை ரேஸ்கோர்சில் இன்று போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை ரேஸ்கோர்சில் இன்று போக்குவரத்து மாற்றம்

கோயம்புத்தூர்

கோவை

மாநகராட்சி சார்பில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி நடப்பதால் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம்

கோவை ரேஸ்கோர்ஸில் மாநகராட்சி சார்பில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக கீழ் கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருச்சி ரோடு - வெஸ்ட் கிளப் சந்திப்பில் இருந்து ரேஸ்கோர்ஸ் வழியாக செஞ்சிலுவை சங்கம் அடைந்து காந்திபுரம் செல்லும் பஸ்கள் அனைத்தும் கிளாசிக் டவர், ரயில் நிலையம், செஞ்சிலுவை சங்கத்தை அடைந்து காந்திபுரம் செல்லலாம். காந்திபுரத்தில் இருந்து ரேஸ் கோர்ஸ் வழியாக திருச்சி சாலை செல்லும் பஸ்கள் அனைத்தும் அவினாசி சாலை அண்ணா சிலை சந்திப்பில் இருந்து லட்சுமி மில் சந்திப்பு, புலியகுளம் சாலை வழியாக ராமநாதபுரம் சந்திப்பை அடைந்து திருச்சி சாலையில் செல்லலாம்.

இதர வாகனங்கள்

திருச்சி ரோடு-வெஸ்ட் கிளப் சந்திப்பிலிருந்து ரேஸ்கோர்ஸ் கே.ஜி.தியேட்டர் வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் ரேஸ்கோர்ஸ் வெஸ்ட் கிளப் சாலையில் இருந்து கிழக்கு நோக்கி திரும்பி ஸ்கீம் ரோடு அல்லது தாமஸ் பார்க் சந்திப்பு, காஸ்மோபாலிடன் கிளப் சந்திப்பை அடைந்து திருஞானசம்பந்தம் சாலை வழியாக அவினாசி சாலையை அடைந்தும் அல்லது தாமஸ் பார்க், அப்துல் ரஹீம் சாலை, காமராஜர் சாலை வழியாக அவினாசி சாலையை அடைந்தும், செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

உசூர் சாலையில் இருந்து கே.ஜி.தியேட்டர் வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்ல ரேஸ்கோர்ஸ் சாலையை பயன்படுத்தும் வாகனங்கள் அனைத்தும் கே.ஜி.தியேட்டர், அரசு கலைகல்லூரி சாலை சந்திப்பு வழியாக மற்ற பகுதிகளுக்கு செல்லலாம்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது


----

Reporter : M.ABULKALAMAZATH_Staff Reporter Location : Coimbatore - Coimbatore


Next Story