வால்பாறையில் போக்குவரத்து நெரிசல்
வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வால்பாறை
வால்பாறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குளுகுளு காலநிலை
வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக காலை முதல் மதியம் வரை கடுமையான வெயில் வாட்டுகிறது. அதன்பிறகு மழை பெய்கிறது. இதனால் வால்பாறை பகுதியில் இதமான குளுகுளு காலநிலை நிலவி வருகிறது. இந்த இதமான காலநிலையை அனுபவிக்க இன்று வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.
அவர்கள் வால்பாறை நகர் பகுதிக்கு அருகில் உள்ள கூழாங்கல் ஆற்று பகுதியில் குவிந்தனர். மேலும் சாலையோரத்தில் இருக்கும் கடைகளில் திண்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
வாகன ஓட்டிகள் அவதி
பின்னர் போலீசார் பாதுகாப்புடன் கூழாங்கல் ஆற்றில் குடும்பத்தினருடன் இறங்கி குளித்தனர். மேலும் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் ஆங்காங்கே நிலவிய பனிமூட்டத்தில் குளிரில் நடுங்கியபடி நின்று புகைப்படம் எடுத்து ரசித்தனர். வால்பாறை பகுதிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்திருந்ததால், நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.