மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு


மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு
x
தினத்தந்தி 9 April 2023 7:00 PM GMT (Updated: 9 April 2023 7:00 PM GMT)

கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்லப்படும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

தேனி

கூடலூர் விவசாயம் நிறைந்த பகுதி ஆகும். இப்பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களை உழுவதற்கும், விவசாய பணிகளுக்கும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் அதிக அளவில் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். தற்போது கூடலூர் வனப்பகுதிக்குள் மேய்ச்சலுக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் கால்நடைகளை கூடலூர்- கம்பம் தேசிய நெடுந்சாலையோரங்களிலும், ஓடைப்பகுதிகளிலும் மேய்ச்சலுக்காக கூட்டமா அழைத்து செல்கின்றனர். பின் மாலையில் அவர்கள் வீடு திரும்புகின்றனர். எப்போதும் வாகனப் போக்குவரத்து அதிகம் உள்ள கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் கூட்டம் கூட்டமாக மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வருவதால் போக்குவரத்துக்கு இடையூறுகள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே மேய்ச்சலுக்காக ஓட்டி வரும் கால்நடைகளை மலையடிவாரம் ஒட்டிய தரிசு நிலங்களிலும், ஓடைப்பகுதிகளிலும் கொண்டு சென்று கால்நடைகளை மேய்க்க நெடுஞ்சாலைதுறையினர் மற்றும் போலீசார் அறிவுறுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


Related Tags :
Next Story