கோர்ட்டு ஊழியருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து ஆய்வாளர் - ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்


கோர்ட்டு ஊழியருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து ஆய்வாளர் - ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்
x

கோர்ட்டு ஊழியருக்கு அபராதம் விதித்ததால் தன்னை நீதிபதி பழிவாங்குவதாக புகார் தெரிவித்த போக்குவரத்து ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

திருவள்ளூர்,

கோர்ட்டு ஊழியருக்கு அபராதம் விதித்ததால் தன்னை நீதிபதி பழிவாங்குவதாக புகார் தெரிவித்த போக்குவரத்து ஆய்வாளர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஊத்துக்கோட்டை போக்குவரத்து ஆய்வாளரான மணிமாறன், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்த ஊத்துக்கோட்டை கோர்ட்டு ஊழியருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இந்த நிலையில், கோர்ட்டு ஊழியர் தன்னை பற்றி தவறான தகவல்களை நீதிபதி தமிழ்செல்வனிடம் கூறியிருப்பதாகவும் அதனால் தமிழ்ச்செல்வன் தன்னை தினமும் கோர்ட்டுக்கு வரவழைப்பதோடு இரண்டு மணி நேரம் காக்க வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் மணிமாறன் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் போக்குவரத்து ஆய்வாளராக இருந்த மணிமாறன், ஆயுதப்படை ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதி குறித்து ஊடகங்களிடம் குற்றம் சாட்டியதற்காகவே அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story