பாலப்பணியால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்
திருவாரூர் அருகே பாலப்பணியால் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்;
திருவாரூர் அருகே பாலப்பணியால் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவிக்கின்றன. எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலத்தில் வேலைகள்
திருவாரூரை அடுத்த கிடாரடங்கொண்டான் அருகே சீனிவாச புரத்தில் ஓடம்போக்கி ஆற்றில் இருந்து பிரியும் அலிவலம் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை கடந்து தான் திருவாரூரில் இருந்து நாகைக்கும், நாகையில் இருந்து திருவாரூருக்கும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாதங்களாக இந்த பாலத்தில் வேலைகள் நடந்து வருகிறது. இதற்காக எச்சரிக்கை பலகைகள் இரும்பு தடுப்புகள் அமைத்து பாலத்தில் வேலை நடக்கிறது. இது குறித்து வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கான்கிாீட்
பாசன வாய்க்காலின் மதகு, மற்றும் தண்ணீர் செல்லும் பாதை ஆகியவற்றை கான்கிரீட் கொண்டு சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் நடக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் பாலத்தின் வேலை ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பாலத்தின் ஒரு பகுதியில் கான்கிாீட் அமைக்கப்பட்டு விட்டது. அதன்மேல் மண் கொட்டப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
குறுகிய இடத்தில்
தொடர்ந்து மறுபாதியில் பணிகள் நடப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட பகுதியில் கனரக வாகனங்கள் சென்று வந்ததால் அந்த பகுதி உள்வாங்கி நிலையில் காணப்பட்டது. மேலும் பள்ளத்தில் மண் அடிக்கடி சரிந்து விழுந்து கொண்டே இருந்தது. சாலையின் ஒரு பாதியில் பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்கள் குறுகிய இடத்திலேயே கடந்து செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.குறிப்பாக தற்போது மண் கொட்டப்பட்டிருப்பதால் மண் உள்வாங்குவதால் அவற்றில் வாகனங்கள் சிக்கி கொள்ளும் நிலையும் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் வாகனங்களை தள்ளிவிட்டு போக்குவரத்தை சரி செய்யக்கூடிய சூழல் இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரி ஒன்று மண்ணில் சிக்கியது. மண் உள்வாங்கும் போதெல்லாம் லாரிகளில் மண் கொண்டு வந்து கொட்டி விடுகின்றனர்.
மாற்று பாதை
இந்த மண்ணில் அதிக பாரங்களை ஏற்றிகொண்டு லாரிகள் செல்லும் போது மீண்டும் உள்வாங்கிவிடுகிறது. நேற்று சரக்கு வாகனம் ஒன்று சிக்கியது. இதனால் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 2 ஆம்புலன்சுகள் காத்திருந்தன. உடனே பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து குற்ற புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வர மூர்த்தி மற்றும் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வைரமணி மற்றும் போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
நாகை சாலை வாகன போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இந்த சாலையில் பாலப்பணிகள் நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. பாலம் கட்டப்பட்டுள்ள ஒரு பகுதியில் மண் கொட்டப்பட்டுள்ளதால் வலுவிழந்து உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் தொடர்ந்து அதில் சென்றால் விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. மாற்றுப் பாதையில் செல்வதற்கு ஏற்பாடு செய்யவில்லை.எனவே விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு விரைந்து இந்த பாலப்பணிகளை முடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினா்.