நொய்யல் பகுதியில் பாலம் கட்டும் பணிக்காக போக்குவரத்து நிறுத்தம்


நொய்யல் பகுதியில் பாலம் கட்டும் பணிக்காக போக்குவரத்து நிறுத்தம்
x

நொய்யல் பகுதியில் பாலம் கட்டும் பணிக்காக திடீரென போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

கரூர்

பாலம் கட்டும் பணி

கரூர் மாவட்டம், நொய்யல்- வேலாயுதம்பாளையம் தார் சாலை வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள், புகழூர் சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை கொண்டு செல்லும் லாரிகள் ஏராளமானவை சென்று வருகின்றன.

அரசு மற்றும் தனியார் பஸ்களில் வேலாயுதம்பாளையம் முதல் நொய்யல் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், ெதாழிலாளர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்களும் சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நடையனூர் தனியார் பள்ளி அருகே தார் சாலையின் குறுக்கே பாலம் கட்டும் பணிக்காக பொக்ைலன் எந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வருகிறது.

போக்குவரத்திற்கு தடை

இதனால் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் நொய்யல் பகுதியிலும், வேலாயுதம்பாளையம் அருகே கந்தம்பாளையம் பகுதியிலும் எந்்த வாகனங்களும் செல்ல முடியாத படி சாலையின் குறுக்கே எந்த இரும்பு தடுப்புகளை வைத்து போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தி விட்டனர்.

இதனால் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் 4 கிலோ மீட்டர் சுற்றி ெசல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

சாலை விபத்து

மேலும், நடையனூர் முதல் கந்தம்பாளையம் வரை தார் சாலையின் இடதுபுறம் ஓரத்தில் நெடுகிலும் சாலை விரிவாக்க பணிக்காக குழிகள் தோண்டப்பட்டு அப்படியே உள்ளன. இதனால் அந்த வழியாக ஸ்கூட்டரில் சென்ற தாய்-மகன் தவறி குழிக்குள் விழுந்து படுகாயம் அடைந்தனர். இதேபோல் தொடர்ந்து விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையோரத்தில் உள்ள குழிகளை ஜல்லிகற்கள் போட்டு சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story