டியூசன் போக சொல்லி அம்மா கண்டித்ததால் விபரீதம் - பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


டியூசன் போக சொல்லி அம்மா கண்டித்ததால் விபரீதம் - பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

நாகர்கோவிலில் டியூசன் போக சொல்லி அம்மா கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் கோட்டார் டி.வி.டி. காலனியை சேர்ந்தவர் பத்மநாபன். இவருடைய மனைவி பானு. இவர்களுக்கு மது பிரசாத் (வயது 15) என்ற மகனும், ஒரு மகளும் உண்டு. பத்மநாபன் தஞ்சாவூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வருகிறார். மகன் மது பிரசாத் நாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் பள்ளி முடித்ததும் மது பிரசாத்தை டியூசனுக்கு செல்லுமாறு அவருடைய தாயார் கூறியதாக தெரிகிறது. ஆனால் மது பிரசாத் டியூசனுக்கு செல்ல மறுத்துள்ளார். அதனை தாயார் கண்டித்ததால் மது பிரசாத் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு தூங்க சென்ற அவர் இன்று காலை அறையை விட்டு வெளியே வராததால் அவரது தாய் அறைக்கு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு மது பிரசாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பானு கூச்சலிட்டார். இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் விரைந்து வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story