கார்- மோட்டார் சைக்கிள் மோதல் இளம்பெண் பரிதாப சாவு


கார்- மோட்டார் சைக்கிள் மோதல் இளம்பெண் பரிதாப சாவு
x
தினத்தந்தி 22 May 2022 8:09 PM GMT (Updated: 22 May 2022 8:10 PM GMT)

சங்ககிரி அருகே கார் மோட்டார் சைக்கிள் ேமாதிக்கொண்ட விபத்தில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். பக்கத்து வீட்டுக்காரர் காயம் அடைந்தார்.

சேலம்

சங்ககிரி:

சங்ககிரி அருகே கார் மோட்டார் சைக்கிள் ேமாதிக்கொண்ட விபத்தில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். பக்கத்து வீட்டுக்காரர் காயம் அடைந்தார்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மேற்பார்வையாளர்

திருப்பூர் மாவட்டம் புதிய பஸ்நிலையம் குமாரசாமி நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் விஜய் (வயது 22). இவர், திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக உள்ளார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பிரபு மனைவி சித்ரா (24). சித்ராவின் சொந்த ஊர், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அழபாறைபட்டி ஆகும்.

இதற்கிடையே சித்ரா தனது சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தாராம். அப்போது பிரபு தான் சேலம் செல்ல இருப்பதாகவும், வந்தால் அங்கிருந்து தர்மபுரிக்கு பஸ் ஏற்றி அனுப்பி விடுவதாகவும் கூறியுள்ளார்.

கார் மோதியது

பின்னர் ஒரு மோட்டார் சைக்கிளில் இருவரும் சேலம் புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பிரபு ஓட்டினார். சித்ரா பின்னால் அமர்ந்து இருந்தார். சங்ககிரி குப்பனூர் பைபாஸ் அருகில் வந்த போது அந்த வழியாக வந்த கார், இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சித்ரா, விஜய் இருவரும் காயம் அடைந்தனர்.

இருவருக்கும் சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

சாவு

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சித்ரா பரிதாபமாக இறந்தார். விஜய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கிடையே மோட்டார் சைக்கிள் மீது மோதிய காரை ஓட்டி வந்தவர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த கிறிஸ்டி (56) என்பது தெரிய வந்தது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கார் மோதி இளம்பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story