பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிய திருப்பூர் ரெயில் நிலையம்


பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிய திருப்பூர் ரெயில் நிலையம்
x

தண்டவாள பராமரிப்பு பணிக்காக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் இல்லாமல் திருப்பூர் ரெயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

திருப்பூர்

தண்டவாள பராமரிப்பு பணிக்காக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் இல்லாமல் திருப்பூர் ரெயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

திருப்பூர் ரெயில் நிலையம்

சேலத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் சேலம் மார்க்கமாக செல்லும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. கோவையில் இருந்து சென்னை புறப்படும் ரெயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் சிரமம் அடைந்தனர். சில ரெயில்கள் தாமதமாகவும் இயக்கப்பட்டது.

கார்த்திகை தீபத்துக்கு முந்தைய கடைசி முகூர்த்த தினம் என்பதால் அதிக அளவிலான திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதனால் நேற்றுமுன்தினம் இரவு திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

சேவை மையம்

ஆனால் நேற்று பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதுபோல் திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து வஞ்சிப்பாளையம் ரெயில் நிலையம் வரை தண்டவாள பராமரிப்பு பணி, வடிகால் பணிகள் நடைபெற்றது.

ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் நேற்று கூடுதலாக சேவை மையம் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டு ஊழியர்கள் ரெயில் சேவை குறித்த தகவல்களை தெரிவித்தனர்.


Related Tags :
Next Story