தர்மபுரிக்குசரக்கு ரெயிலில் 1,458 டன் யூரியா வந்தன


தர்மபுரிக்குசரக்கு ரெயிலில் 1,458 டன் யூரியா வந்தன
x
தினத்தந்தி 17 April 2023 12:30 AM IST (Updated: 17 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

சென்னை மணலியில் இருந்து 1,458 டன் யூரியா மூட்டைகள் சரக்கு ரெயில் மூலம் தர்மபுரி ரெயில் நிலையத்திற்கு வந்தது. இந்த யூரியா மூட்டைகளை ரெயிலில் இருந்து இறக்கி லாரிகள் மூலம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டன. இந்த பணியை வேளாண் தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது விற்பனை அலுவலர் மேகநாதன், மொத்த விற்பனையாளர் நாதன் ஆகியோர் உடன் இருந்தனர். தர்மபுரி மாவட்ட உரக்கடைகளுக்கு 705.15 டன் யூரியாவும், கிருஷ்ணகிரி மாவட்ட உரக்கடைகளுக்கு 752.85 டன் யூரியாவும் பிரித்து அனுப்பப்பட்டது. விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி அரசு நிர்ணயித்த விலையில் யூரியா உரம் பெற்று பயனடையுமாறு தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விஜயா தெரிவித்துள்ளார்.


Next Story