விவசாயிகளுக்கு பயிற்சி


விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 25 Sep 2023 8:20 PM GMT (Updated: 25 Sep 2023 10:25 PM GMT)

நுண்ணீர் பாசன பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர்

சேதுபாவாசத்திரம்:

சேதுபாவாசத்திரம் அருகே, குப்பத்தேவன் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி தலைமை தாங்கினார். வேளாண்மை பொறியியல் துறையின் உதவி பொறியாளர் செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தமிழழகன், ஜெயக்குமார், உதவி வேளாண்மை அலுவலர் பிரதீபா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் துணை வேளாண்மை அலுவலர் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.


Next Story