காலை உணவு திட்ட பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்


காலை உணவு திட்ட பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 6 Sept 2023 12:15 AM IST (Updated: 6 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி ஒன்றியத்தில் காலை உணவு திட்ட பணியாளர்களுக்கு பயிற்சி முகாம்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

சீர்காழி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 64 தொடக்கப்பள்ளிகளில் தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் காலை உணவு திட்ட பணியாளர்களுக்கான 1 நாள் பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு ஒன்றிய ஆணையர் சரவணன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) இளங்கோவன் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபால் வரவேற்றார். இதில் மயிலாடுதுறை மாவட்ட உதவி திட்ட இயக்குனர் குணசேகரன் கலந்து கொண்டு பேசுகையில், தமிழக முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு உரிய நேரத்தில் தரமான உணவை பணியாளர்கள் வழங்க வேண்டும். மேலும் பள்ளி மாணவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். பள்ளிகளில் காலை உணவு திட்டம் சிறப்பாக நடைபெற பணியாளர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார். இதில் 170 பணியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில் வட்டார இயக்க மேலாளர் மாதரசி நன்றி கூறினார்.


Next Story