கல்வெட்டியல்-மரபு மேலாண்மை பட்டய படிப்பிற்கான பயிற்சி முகாம்
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல்-மரபு மேலாண்மை பட்டய படிப்பிற்கான பயிற்சி முகாம் நடந்தது.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சமுதாய கல்லூரியில் கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மை பட்டயப் படிப்பிற்கான பயிற்சி முகாம் 9 நாட்கள் நடந்தது.இந்திய மற்றும் தமிழக கோவில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, பல்லவர், சோழர், பாண்டியர் கால வட்டெழுத்துக்கள், இடைக்காலச் சோழர், பிற்காலப் பாண்டியர், நாயக்கர், ஐரோப்பியர் காலத் தமிழ் கல்வெட்டுகள், பல்லவர், சோழர், பாண்டியர், செப்புபட்டயங்கள், தமிழக ஓலைச்சுவடிகள் பற்றிய பயிற்சியை இந்திய மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள், மாணவர்களுக்கு அளித்தனர். மேலும் தமிழக வரலாற்றை எழுதுவதற்கான மூல ஆவணங்களாக பாதுகாக்கப்படுகின்ற முறையில் மரபு மேலாண்மை என்ற புதிய பாடப்பயிற்சியும், வட்டெழுத்து மற்றும் கல்வெட்டுகள் மற்றும் செப்புப் பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் பயிற்சியும் அளிக்கப்பட்டன. இந்த பயிற்சியில் தென்காசி, திருநெல்வேலி, சென்னை, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சை மற்றும் திருவாரூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பேராசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.