சாரண-சாரணிய மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

வால்பாறையில் சாரண-சாரணிய மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
வால்பாறை
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆனைமலை சாரண-சாரணிய இயக்கம் மூலம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள 22 பள்ளிகளை சேர்ந்த 350 சாரண-சாரணிய மாணவர்களுக்கு ஆளுனர் விருது பெறுவதற்கான தகுதிபெற 3 நாட்கள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. நாளை (சனிக்கிழமை) வரை நடைபெறும் இந்த முகாமில் சாரண-சாரணிய உறுதி மொழி, உடற்பயிற்சி, தேசபக்தி, நல்லொழுக்கம், தற்கால நாட்டு நடப்பு, தனித் திறமையை வளர்த்து கொள்வது போன்ற பல்வேறு பயிற்சிகள் இந்த முகாமில் வழங்கப்படுகிறது. முன்னதாக முகாமை வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வம் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், சாரண-சாரணிய மாணவர்களுக்கு வாழ்த்து கூறி இந்த அறிய வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறி பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
இதற்கான ஏற்பாடுகளை ஆனைமலை மாவட்ட சாரண-சாரணிய செயலாளர் ராஜா, பொருளாளர் முத்தையாசாமி ஆகியோரின் தலைமையில் சாரண-சாரணிய ஆசிரியர்கள் ரூத் பேபி, கலாராணி மற்றும் ராகவன் ஆகியோர் செய்திருந்தனர்.






