ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்


ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
x

மன்னார்புரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

மன்னார்புரம் புனித ஆரோக்கிய அன்னை வளாகத்தில் வைத்து தென்மண்டல கல்வி பணிக்குழு மற்றும் மன்னார்புரம் சேவை மையம் இணைந்து 6, 7, 8-ம் வகுப்பு ஆங்கில ஆசிரியர்களுக்கான ஆங்கில வளமை பயிற்சி முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி மறைமாவட்டம் ஆர்.சி. பள்ளிகளின் கண்காணிப்பாளர் பங்குத்தந்தை ஜோசப் டி.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மன்னார்புரம் பங்குத்தந்தை ஜெ.எட்வர்ட் முன்னிலை வகித்தார். நாங்குநேரி யூனியன் கவுன்சிலர் நல்லாசிரியர் எம்.ஆர்.அகஸ்டின் கீதராஜ் ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி அளித்தார். முகாமில் 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ஜஸ்டின் கிளாடியோ நன்றி கூறினார்.


Next Story