பள்ளி செல்லாத குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்த பயிற்சி முகாம்


பள்ளி செல்லாத குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்த பயிற்சி முகாம்
x

பள்ளி செல்லாத குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

மதுரை


பள்ளி செல்லாத குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

பள்ளி செல்லாத குழந்தைகள்

மதுரை மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகளுக்கான செயல்பாடுகள் மற்றும் அவர்களை பள்ளியில் சேர்ப்பது குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை தாங்கினார். மேலூர் கல்வி மாவட்ட அலுவலர் முத்துலட்சுமி, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பயிற்சியை தொடங்கி வைத்து முதன்மைக்கல்வி அலுவலர் பேசும்போது, மாவட்டத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் கண்டறியப்பட்டவுடன் உடனடியாக பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள், பொருளாதார சூழ்நிலையால் பள்ளிக்கு வராத மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினரையும் கண்டறிந்து மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் மூலமாக உடனடியாக பள்ளியில் சேர்க்க வேண்டும். பள்ளி செல்லாத குழந்தைகள் இல்லாத மாவட்டமாக மதுரை உருவாக அனைத்து முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

பயிற்சி

பின்னர், பள்ளி செல்லாத குழந்தைகளை எப்படி கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது எவ்வாறு, இதில் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் பங்களிப்பு என்ன ஆகியன குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் டயானா பயிற்சி அளித்தார். பள்ளி செல்லாத குழந்தைகள், அவர்களின் எண்ணிக்கை, கண்டறியப்பட்ட குழந்தைகளை பள்ளியில் சேர்த்தல், மூன்றடுக்கு அமைத்தல் (மாவட்ட கலெக்டர், பல்வேறு அரசுத்துறைகளின் மாவட்ட அதிகாரிகள், பள்ளிகள்), இ.எம்.ஐ.எஸ். பதிவேற்றம் ஆகியன குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமுதா பயிற்சி அளித்தார். மாவட்ட அளவில் பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகளுக்கான செயல்பாடுகள் குறித்த இந்த பயிற்சியில், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், புள்ளியியல் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story