விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
தாயில்பட்டி அருகே விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
விருதுநகர்
தாயில்பட்டி,
தாயில்பட்டி அருகே உள்ள உள்ள கோட்டைப்பட்டியில் அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குனர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். உதவி தொழில்நுட்ப மேலாளர் முத்துச்செல்வி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணி வரவேற்றார். பயிரில் பூச்சி மருந்து தெளிக்கும் போது கைகளில் கையுறை அணிய வேண்டும். கண்களில் கண்ணாடி, முககவசம் அணிய வேண்டும். மருந்து தெளிக்கும் போது காற்றின் எதிர் திசையில் மருந்து தெளிக்க கூடாது என பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் வேளாண்மை துறை செயல்படுத்தும் திட்டங்கள் பற்றி விளக்கமாக எடுத்துக்கூறப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் மாரிராஜ் செய்திருந்தார்.
Related Tags :
Next Story