விவசாயிகளுக்கு பயிற்சி


விவசாயிகளுக்கு பயிற்சி
x

நடுவக்குறிச்சியில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை வட்டாரம் நடுவக்குறிச்சி கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கிராம வேளாண் முன்னேற்ற குழுவிற்கு முன் பருவ பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் முன்பருவ சாகுபடி குறித்தும், மண் பரிசோதனை, கோடை உழவு, பசுந்தாள் உரப்பயிர், உயிர் உரங்கள், வறட்சி மேலாண்மை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

நெல்லை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சுபசெல்வி தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். நடுவக்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் சிவகுமார், வேளாண்மை அலுவலர் இசக்கி பாப்பா, முன்னோடி விவசாயி ஆறுமுகம் ஆகியோர் பேசினர். உதவி வேளாண்மை அலுவலர் ஆனந்தராஜ் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜ்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் சுடலைமுத்து ஆகியோர் செய்திருந்தனர். பயிற்சியில் 25-க்கும் மேற்பட்ட குழு விவசாயிகள் கலந்துகொண்டனர்.


Next Story