விவசாயிகளுக்கு, டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பயிற்சி


விவசாயிகளுக்கு, டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பயிற்சி
x

விவசாயிகளுக்கு, டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

கீழ்வேளூர் ஒன்றியம் அகரகடம்பனூர் ஊராட்சி நாங்குடி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு குறுவை பயிர்களுக்கு டிரோன் மூலம் உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்து தெளித்தல் குறித்த செயல் விளக்கம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குலா அகண்ட ராவ் முன்னிலையில் நடைபெற்றது. இதில் குருக்கத்தி அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் மற்றும் வேளாண்மை அதிகாரிகள் கலந்துகொண்டு நானோ யூரியா பயன்படுத்தும் முறைகள் பற்றியும், டிரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளித்தல் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் கீழ்வேளூர் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜலெட்சுமி,வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய (பொறுப்பு) அதிகாரி சந்திரசேகரன், தோட்டகலை துறை‌ உதவி பேராசிரியர் கமல்குமரன், பயிர் நோயியல் துறை உதவி பேராசிரியர் அகிலாதேவி, வேளாண்மை அலுவலர்கள் பிரான்சிஸ், ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story