ஆசிரியர்களுக்கு பணி திறன் மேம்பாட்டு பயிற்சி


ஆசிரியர்களுக்கு பணி திறன் மேம்பாட்டு பயிற்சி
x

சேந்தமங்கலம் வட்டாரத்தில் ஆசிரியர்களுக்கு பணி திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

நாமக்கல்

சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வட்டார அளவில் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி 2 நாட்கள் நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரஸ்வதி தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். வட்டார பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கவுசல்யா ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு மதிப்பீடு, வாசிப்பு இயக்கம், சிறார் இதழ்கள் சார்ந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. பாடத்திட்டத்தின் புதுமைகள், மாதிரி வகுப்புகள், கற்றல் துணைக்கருவிகள் பயன்படுத்தும் உத்திகள், வரைபடம் வரைதல், கடிதம் எழுதுதல் போன்றவற்றை மாணவர்களுக்கு எளிமையாக கற்பித்தல் குறித்து கருத்தாளர்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் வட்டார அளவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.


Next Story