1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி

1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி
x

தஞ்சை மாவட்டத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. 16 மையங்களில் நடைபெறும் இந்த பயற்சி வகுப்பில் 2,104 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:-

தஞ்சை மாவட்டத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கியது. 16 மையங்களில் நடைபெறும் இந்த பயற்சி வகுப்பில் 2,104 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

பயிற்சி வகுப்பு

1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்த வட்டார அளவிலான பயிற்சி வகுப்பு நேற்று தமிழகம் முழுவதும் தொடங்கியது. இந்த பயிற்சி வகுப்பு வருகிற 10-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

தொடக்க நிலை மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை நீக்கும் வகையில் இந்த பயிற்சி வகுப்பு ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 16 மையங்களில் இந்த பயிற்சி வகுப்பு தொடங்கியது. தஞ்சையில் மாநகர் மற்றும் புறநகர் என 2 இடங்களிலும், கும்பகோணத்தில் 2 இடங்களிலும், இதர 12 ஒன்றியங்களிலும் தலா 1 இடத்திலும் நடைபெற்றது.

2,104 பேர் பங்கேற்பு

தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சிவக்குமார் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது மாவட்ட கல்வி அதிகாரி குழந்தைராஜ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உடன் இருந்தனர். தஞ்சை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 3 வகுப்பறைகளில் பயிற்சி நடைபெற்றது. இதில் 132 ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இதே போல் 16 மையங்களிலும் நடந்த பயிற்சி வகுப்பில் 2,104 பேர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பு வருகிற 10-ந் தேதி வரை நடைபெறுகிறது.

Next Story