அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி
எருமப்பட்டியில் மாணவர்களுக்கு ஆலோசனை கூற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
நாமக்கல்
எருமப்பட்டி
எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ்-2 தேர்வு எழுதிய 8 அரசு மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து பயன்பெறும் வகையில் ஆலோசனை வழங்குவதற்காக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான ஆலோசனை சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பயிற்றுனர் பெரியசாமி முன்னிலை வகித்தார். இதில் பயிற்சி நிறுவனத்தின் ஆசிரியர்கள் பிளஸ்-2 மாணவ, மாணவிகள் உயர்கல்வியில் எப்படி சேர்வது என்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில் 135 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Related Tags :
Next Story