ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி


ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி
x
தினத்தந்தி 19 Jun 2023 12:45 AM IST (Updated: 19 Jun 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

கீழ்வேளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான 6 முதல் 10-ம் வகுப்புக வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ரவிசங்கர் தொடங்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார். இதில் மாணவர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் மேம்பாட்டிற்கு பயிற்சி அளித்தல், பள்ளிகளில் நடைபெறும் மன்ற செயல்பாடுகள், அதன் மூலம் அனைத்து வகையான, மாணவர்களின் தனித்திறமையை மேம்படுத்த உதவுதல், கலையரங்கம் என்னும் தலைப்பில் கலைத் திருவிழா நடத்துவதற்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 60-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியில் லோகநாதன், நரேஷ் குமார், கீதா, ரத்தினமலர் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.


Next Story