மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி


மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி
x

திண்டுக்கல்லில், 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல்

தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதில் ஒரு அங்கமாக 1-ம் வகுப்பில் இருந்து 3-ம் வகுப்பு வரை பயிலும் காலத்திலேயே மாணவர்கள் எழுத்து, எண்களை அறிந்து எழுதும் வகையில் சிறப்பு கவனத்துடன் கற்பிக்கப்பட இருக்கிறது. இதையொட்டி 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்புக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சியில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 374 ஆசிரியர்களுக்கு 31 இடங்களில் எண்ணும், எழுத்தும் எனும் தலைப்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. திண்டுக்கல்லை சேர்ந்த ஆசிரியர்களுக்கு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

இதில் மாணவ-மாணவிகளை அரும்பு, மொட்டு, மலர் என 3 நிலைகளாக பிரித்து அதற்கேற்ப பாடம் கற்பிக்க வேண்டும். தமிழ், ஆங்கில எழுத்துக்களை வாசித்தல், சொற்களை வாசித்தல், எண்களை வாசித்தல் மற்றும் எழுதுதல் ஆகியவற்றில் மாணவர்களை ஆர்வமுடன் ஈடுபட வைப்பது தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வருகிற 10-ந்தேதி வரை நடக்கிறது.


Next Story