இல்லம் தேடிகல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி


இல்லம் தேடிகல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி
x

இல்லம் தேடிகல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றிய வட்டார வள மையத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து 2 நாட்கள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு மேற்பார்வையாளர் அரிகிருஷ்ணன், பயிற்சியின் நோக்கம், முக்கியத்துவத்தை பற்றி எடுத்துக்கூறினார். ஒருங்கிணைப்பாளர் அருள்பயாஸ், தன்னார்வலர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை எடுத்துக்கூறினார். கருத்தாளர்களாக ஆசிரியர்கள் சரசு, ராஜி ஆகியோர் செயல்பட்டு இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு, இவற்றின் முக்கியத்துவங்கள், இத்திட்டம் தோன்றியதன் காரணம், இலக்கு, மாணவர்களை கற்றலில் ஆர்வமுடன் பங்கேற்று எப்படி சிறப்புற செய்வது என்பதை பல்வேறு செயல்பாடுகள், பாடல்கள், கதைகள், விளையாட்டுகள், பொம்மலாட்டம் போன்றவை மூலம் விளக்கி எடுத்துக்கூறினர். இதில் தன்னார்வலர்கள், அனைத்து செயல்பாடுகளிலும் ஆர்வமுடன் போட்டி போட்டுக்கொண்டு செயல்பட்டனர்.


Next Story