வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x

வேளாண் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.

கரூர்

தரகம்பட்டி அருகே உள்ள செம்பியநத்தம் ஊராட்சியில் விவசாயிகளுக்கு பாரம்பரிய வேளாண்மை வளர்ச்சி திட்டங்கள் குறித்து சிறப்பு பயிற்சி நடந்தது. இதற்கு கடவூர் வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா தலைமை தாங்கினார். விதை சான்றளிப்புத்துறை வேளாண்மை உதவி இயக்குனர் கவுதமி முன்னிலை வகித்தார்.

இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம், மண் வளங்களை அதிகரிக்க செய்வது, நவ தானியங்கள், தொழு உரங்கள் மற்றும் நுண்ணுயிர் உரங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், இணைய வழி பாரம்பரிய விவசாயிகள் குழு பதிவு செய்தல், சான்றுகள் பெறுதல் குறித்தும் விளக்கி கூறப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் முத்தமிழ்செல்வன், அட்மா திட்ட உதவி தொழில் நுட்ப மேலாளர் கவியரசன் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் வேளாண்மை அலுவலர் சரண்யா நன்றி தெரிவித்தார்.


Next Story