வீட்டு காய்கறி தோட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


வீட்டு காய்கறி தோட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x

தோட்டக்கலைத்துறை சார்பில் வீட்டு காய்கறி தோட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி வட்டார தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ், உள்மாவட்ட அளவிலான மாடித்தோட்டம் மற்றும் வீட்டு காய்கறி தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் கோத்தகிரி அருகே தும்பூர் கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு ஊர்த்தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைந்த நீலகிரி பாதுகாப்பு சங்கத்தின் களப்பயிற்றுநர் கலைவாணன், வீடுகள் மற்றும் வீட்டு மாடியில் தோட்டம் அமைத்தல் குறித்து தொழில்நுட்பங்கள் பற்றி பேசினார்.

வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை உதவி வேளாண்மை அலுவலர் வெற்றிவேல் குமார், உழவர் சந்தையின் செயல்பாடுகள் மற்றும் பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த், திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து விளக்கினார்.

மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் போஜன், வேளாண்மையில் ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் அதனை எதிர்கொள்ளும் முறைகள் குறித்து விளக்கி பேசினார்.

இந்த பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். முடிவில் உதவி தோட்டக்கலை அலுவலர் அஜித் நன்றி கூறினார்.


Next Story