ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x

ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது.

கரூர்

கடவூர் அருகே உள்ள குரும்பப்பட்டியில் வேளாண்மைத்துறை சார்பாக அட்மா திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணை திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடந்தது. இதற்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். கடவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா, கால்நடை மருத்துவ அலுவலர் ரேணுகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சோளம் பயிர் சாகுபடி, கறவை மாடு வாங்குதல், மண்புழு உரம் தயாரிப்பு, தேனி பெட்டிகள் பராமரிப்பு போன்ற விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு மானியங்கள் வழங்கப்படுவது குறித்து எடுத்துக்கூறி பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், சிறுதானிய சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் உழவன் செயலியின் பயன்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. முடிவில் உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் கவியரசன், போதும்பொண்ணு ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story