மின்மாற்றி பராமரிப்பு குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி
காட்பாடி அருகே மின்மாற்றி பராமரிப்பு குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
வேலூர்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வேலூர் மின் பகிர்மான வட்டம் காட்பாடி கோட்டம், திருவலம் பிரிவிற்கு உட்பட்டது சிவானந்நா நகர். இங்குள்ள மின்மாற்றியை சிறப்பாக பராமரிப்பது குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஓய்வுபெற்ற செயற் பொறியாளர் தங்கராஜ் கலந்துகொண்டு ஊழியர்களுக்கு பயிற்சி அளித்தார்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக வேலூர் மண்டல தலைமை பொறியாளர் தேன்மொழி, வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மதியழகன், காட்பாடி கோட்ட செயற் பொறியாளர் பரிமளா ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் காட்பாடி கோட்டத்தை சேர்ந்த பொறியாளர்கள், ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story