தன்னார்வலர்களுக்கு பயிற்சி


தன்னார்வலர்களுக்கு பயிற்சி
x
நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்தி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட குடியிருப்புகளில் உள்ள எழுத படிக்க தெரியாதவர்களுக்காக புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டிற்கான கற்பித்தல் மையங்கள் தொடங்கி ஆசிரியராக பணிபுரியவிருக்கும் தன்னார்வலர்களுக்கான கூட்டம் வட்டார வள மைய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வட்டார கல்வி அலுவலர் கவுரி, வட்டார வள மேற்பார்வையாளர் சுபா மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் அனிதாகுமாரி ஆகியோர் பேசினா். பரமத்தி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் 15-வயதிற்கும் மேற்பட்ட முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்கள் 969 பேர் கண்டறியப்பட்டு 61 கற்பித்தல் மையங்களானது பள்ளி வளாகங்கள், கற்போர் குடியிருப்பு பகுதி, 100 நாள் வேலை திட்டம் நடைபெறும் இடம் ஆகியவற்றில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் வருகிற 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதி வாரம் வரை பள்ளி வேலை நாட்களில் மட்டும் நாள் ஒன்றுக்கு 2 மணி நேரம் வீதம் ஆறு மாதத்திற்கு நடக்கும்.


Next Story