மின் சிக்கன பயன்பாடு குறித்த பயிற்சி


மின் சிக்கன பயன்பாடு குறித்த பயிற்சி
x

நாகையில் மின் சிக்கன பயன்பாடு குறித்த பயிற்சி நடந்தது.

நாகப்பட்டினம்

நாகையை அடுத்த பாப்பா கோவிலில் உள்ள சர் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்னாற்றல் சேமிப்பு மற்றும் மின் சிக்கன பயன்பாடு குறித்த பயிற்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.கல்லூரி தாளாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கண்காணிப்பு பொறியாளர் சசிதரன், பொறியாளர்கள் சேகர், மனோகரன், ராஜ மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொறியியல் கல்லூரி முதல்வர் ஜிப்சன் சாமுவேல் நன்றி கூறினார்.


Next Story