கிருஷ்ணகிரியில் அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கு அகழ்வாராய்ச்சி குறித்து பயிற்சி


கிருஷ்ணகிரியில் அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கு அகழ்வாராய்ச்சி குறித்து பயிற்சி
x

பழமை வாய்ந்த கல்வெட்டுகள், நடுகற்கள் உள்ளிட்டவை குறித்து கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாளர் கோவிந்தராஜ் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்ப்பனப்பள்ளி அருகே அரசு கலைக்கல்லூரி மாணவிகளுக்கு அகழ்வாராய்ச்சி குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. பழமை வாய்ந்த குந்தானி கோவிலின் கல்வெட்டுகள், கற்சிற்பங்கள், கல்திட்டைகள், பாறை ஓவியங்கள், நடுகற்கள் ஆகியவை குறித்து கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாளர் கோவிந்தராஜ் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார்.

இதற்காக வனப்பகுதியில் சுமார் 5 கி.மீ. தூரம் வரை கரடு, முரடான பாதைகளின் வழியே சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

1 More update

Next Story