சிறு தொழில் குறித்து பெண்களுக்கு பயிற்சி
சிறு தொழில் குறித்து பெண்களுக்கு பயிற்சி நடந்தது.
தரகம்பட்டி அருகே உள்ள வரவணை ஊராட்சி மற்றும் பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு பிறந்தநாள் கேக், முறுக்கு, பிஸ்கட் உள்ளிட்டவை தயாரிப்பது குறித்து சிறு தொழில் பயிற்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஊர் பெரியதனம் செல்வம், வெங்கடாஜலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கான சிறு தொழில் பயிற்றுனர் திருச்சி பொன்செல்வி கலந்து கொண்டு பயிற்சிகள் அளித்து, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதன் மூலம் தன்னிறைவு பெற்ற குடும்பங்கள் உருவாகி நிலையான வருமானம் மற்றும் நீடித்த வளர்ச்சி அடைந்து சமூகத்தில் மறுமலர்ச்சி உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. இதில், ஊராட்சி மன்ற செயலாளர் வீராச்சாமி, பசுமைக்குடி தன்னார்வலர்கள், பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.