ஆசி்ரியர்களுக்கான பயிற்சி பட்டறை


ஆசி்ரியர்களுக்கான பயிற்சி பட்டறை
x

காவனூர் இந்திரா நர்சரி பள்ளியில் ஆசி்ரியர்களுக்கான பயிற்சி பட்டறை நடந்தது.

ராணிப்பேட்டை

திமிரியை அடுத்த காவனூர் இந்திரா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெற்றது. பள்ளி நிர்வாகி ஆர்.சேட்டு தலைமை தாங்கினார். பள்ளி கணக்காளர் கே.லட்சுமி, கணினி ஆசிரியர் எம்.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் எம்.கோபி வரவேற்றார்.

ஆசிரியர்களுக்கான பயிற்சி பட்டறையில் பள்ளி நிர்வாகி பேசும் போது, பிள்ளைகள் சரியாக படிக்கவில்லை என ஆசிரியர்கள் கண்டிக்கும் போது பெற்றோர்கள் தலையிடக்கூடாது. அப்படிப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகள் தான் நன்றாக படிப்பார்கள். கண்டிப்பாக குழந்தைகளிடத்தில் செல்போன் கொடுப்பதை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும் என்றார். ஆங்கில ஆசிரியர் ஆர்.ராஜா குழந்தைகளுக்கு எளிய முறையில் ஆங்கிலம் கற்பிப்பது எப்படி? என்பது பற்றி பயிற்சி அளித்தார். முடிவில் உதவி ஆசிரியை எஸ்.பிரேமலதா நன்றி கூறினார்.


Next Story