நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி இடமாற்றம்
நாமக்கல்
நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சரோஜ்குமார் தாக்கூர் கடந்த மார்ச் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த சாய்சரண் தேஜஸ்வி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி பொறுப்பேற்று கொண்டார்.
ஆனால் இவர் சில மாதங்களிலேயே தனது சொந்த மாநிலத்திற்கு இடமாறுதல் கேட்டு தமிழக அரசிடம் விண்ணப்பம் கொடுத்தார். இந்த நிலையில் அவர் விருப்ப மாறுதலில் ஐதராபாத்தில் உள்ள போலீஸ் அகாடமிக்கு சென்று விட்டார். எனவே நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (மதுவிலக்கு) மணிமாறன் பொறுப்பு வகித்து வருகிறார்.
Related Tags :
Next Story