நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்-கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவு
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் 15 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டார்.
இடமாற்றம்
நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணியாற்றி வரும் 15 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த குணாளன், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி பிரிவு மேலாளராகவும், பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மாதவன், திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலராகவும், திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) டேவிட் அமல்ராஜ், பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கு பணியாற்றி வந்த மலர்விழி, எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
ராசிபுரம்
நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், அதே வட்டாரத்தில் கிராம ஊராட்சிக்கும், அங்கு கிராம ஊராட்சியில் பணியாற்றி வந்த சுந்தரம், புதுச்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கும் (கிராம ஊராட்சிகள்), அங்கு பணியாற்றி வந்த தனம், ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதேபோல் ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சிகள்), எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சிகள்) பணியாற்றி வந்த தமிழரசி, எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அங்கு பணியாற்றி வந்த லோகமணிகண்டன், மல்லசமுத்திரம் வட்டாரத்திற்கும் (கிராம ஊராட்சிகள்) இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
5 பேருக்கு பதவி உயர்வு
மல்லசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த அருண்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், ஏற்கனவே அங்கு பணியாற்றி வந்த சுகிதா, சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சிகள்), அங்கு பணியாற்றி வந்த அருளப்பன், எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சிகள்), எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பராஜன், கபிலர்மலை வட்டாரத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் 5 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.