ராசிபுரம், சேந்தமங்கலம் உள்பட 14 தாசில்தார்கள் இடமாற்றம்


ராசிபுரம், சேந்தமங்கலம் உள்பட 14 தாசில்தார்கள் இடமாற்றம்
x

ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சேந்தமங்கலம் தாசில்தார் உள்பட 14 தாசில்தார்களை பணி இடமாற்றம் செய்து கலெக்டர் உமா உத்தரவிட்டு உள்ளார்.

நாமக்கல்

பணி இடமாற்றம்

சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனித் தாசில்தாராக அப்பன்ராஜ் பணியாற்றி வந்தார். அவர் கொல்லிமலை தாசில்தாராக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதேபோல் நாமக்கல் முத்திரை கட்டண தனித் தாசில்தாராக பணியாற்றிய பாஸ்கரன், சேந்தமங்கலம் சமூக பாதுகாப்பு திட்ட தனித்தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

மேலும் திருச்செங்கோடு தாசில்தாராக பணியாற்றி வந்த பச்சமுத்து, நாமக்கல் முத்திரை கட்டண தனித் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு மாநில வாணிபக் கழக உதவி மேலாளராக பணியாற்றி வந்த விஜயகாந்த், திருச்செங்கோடு தாசில்தார் பணிக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

ராசிபுரம்

இதனிடையே திருச்செங்கோடு அலகில் சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடத்திட்ட துணை தாசில்தாராக பணியாற்றி வந்த ராஜ்குமார், தமிழ்நாடு மாநில வாணிபக் கழக உதவி மேலாளராகவும், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை தனித் தாசில்தாராக பணியாற்றி வந்த சீனிவாசன் சேந்தமங்கலம் தாசில்தாராகவும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். நாமக்கல் கலெக்டரின் அலுவலக மேலாளராக (பொது) இருந்து வந்த அரவிந்தன், பேரிடர் மேலாண்மை தனித் தாசில்தாராக பணியமர்த்தப்பட்டு உள்ளார்.

அதேபோல் ராசிபுரம் தாசில்தார் சுரேஷ், கலெக்டரின் அலுவலக மேலாளர் (பொது) பணிக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நாமக்கல் ஆதிதிராவிட நலத்துறையில் தனித்தாசில்தாராக பணியாற்றி வந்த சரவணன் ராசிபுரம் தாசில்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார். நாமக்கல் கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளர் தமிழரசி, நாமக்கல் ஆதிதிராவிட நலத்துறை தனித் தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றி வந்த முத்துக்குமார், பரமத்திவேலூருக்கு சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாராகவும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

பதவி உயர்வு

மேலும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் நாமக்கல் கிடங்கு மேலாளர் கருணாநிதி, மோகனூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், குமாரபாளையம் வட்ட வழங்க அலுவலர் வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகக் கிடங்கு மேலாளராகவும், சேந்தமங்கலம் தாசில்தார் செந்தில்குமார், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அயலக தமிழர் நலன் தனி தாசில்தாராகவும் என மொத்தம் 14 பேரை பணி இடமாற்றம் செய்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவிட்டு உள்ளார். அதில் அதிகாரிகள் ராஜ்குமார், தமிழரசி, முத்துக்குமார் மற்றும் வெங்கடேஸ்வரன் ஆகிய 4 துணை தாசில்தார்களுக்கு, தாசில்தார்களாக தற்காலிக பதவி உயர்வு வழங்கப்பட்டு புதிய பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story