5 தாசில்தார்கள் இடமாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 தாசில்தார்கள் இடமாற்றம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் கள்ளக்குறிச்சி நில எடுப்பு தனி தாசில்தார் வாசுதேவன் கல்வராயன்மலை தாசில்தாராகவும், அங்கு தாசில்தாராக பணிபுரிந்து வந்த சையத்காதர் கள்ளக்குறிச்சி தேர்தல் தனி தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி தேர்தல் தனிதாசில்தார் பாலகுரு கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் கள்ளக்குறிச்சி நில எடுப்பு தனி தாசில்தார் ராஜலட்சுமி சங்கராபுரம் சமூக பாதுகாப்பு தனி தாசில்தாராகவும், உளுந்தூர்பேட்டை ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் மணிகண்டன் கள்ளக்குறிச்சி நிலநடுப்பு தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story