நெல்லை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் இடமாற்றம்
நெல்லை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் இடமாற்றம் செய்ய்பட்டனர்.
நெல்லை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை உதவி செயற்பொறியாளர் சரவணகுமார் நெல்லை, தச்சநல்லூர் மண்டலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தச்சநல்லூர், மேலப்பாளையம் மண்டல உதவி செயற்பொறியாளர் லெனின் பாளையங்கோட்டை, மேலப்பாளையம் மண்டலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேபோல் உதவி பொறியாளர்கள் பைஜூ, சொரிமுத்து, பட்டுராஜன் ஆகியோர் நெல்லை மண்டலத்திற்கும், நாகராஜன் தச்சநல்லூர் மண்டலத்திற்கும், பிலிப்அந்தோணி மேலப்பாளையம் மண்டலத்திற்கும், சிவசுப்பிரமணியன் மேலப்பாளையம் மண்டலத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இளநிலை பொறியாளர்கள் ரவி நெல்லை மண்டலத்திற்கும், ரமேஷ் தச்சநல்லூர் மண்டலத்திற்கும், அய்யப்பன் தச்சநல்லூர் மண்டலத்திற்கும், தன்ராஜ், சத்தியநாதன் பாளையங்கோட்டை மண்டலத்திற்கும், ராமசாமி பாளையங்கோட்டை மண்டலத்திற்கும், முருகன் மேலப்பாளையம் மண்டலத்திற்கும், ஞானசேகரன் மேலப்பாளையம் மண்டலத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி பிறப்பித்துள்ளார்.