விழுப்புரம் மாவட்டத்தில் 30 போலீஸ்காரர்கள் இடமாற்றம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு


விழுப்புரம் மாவட்டத்தில்    30 போலீஸ்காரர்கள் இடமாற்றம்    போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 Dec 2022 6:45 PM GMT (Updated: 15 Dec 2022 6:47 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் 30 போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட மொத்தம் 30 போலீஸ்காரர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரோஸ்லின்மேரி விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்துக்கும், விழுப்புரம் போக்குவரத்து போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அகிலாண்டம், போக்குவரத்து கட்டுப்பாட்டுஅறைக்கும், தலைமை காவலர்கள் கிளியனூர் பாரத் மரக்காணத்திற்கும், விழுப்புரம் தாலுகா குணா, வளவனூருக்கும், கோட்டக்குப்பம் ராஜசெல்வம் கிளியனூருக்கும், வானூர் விஜயகுமார் மரக்காணத்திற்கும், திருவெண்ணெய்நல்லூர் செந்தில்நாதன் விக்கிரவாண்டிக்கும், கஞ்சனூர் செல்வமுருகன் விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்துக்கு என்று மாவட்டம் முழுவதும் மொத்தம் 30 போலீஸ்காரர்கள் மாவட்டத்துக்குள் உள்ள போலீஸ் நிலையங்களுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story