முதன்மை கல்வி அலுவலர்கள் பணி இடமாற்றம் -கல்வித்துறை உத்தரவு


முதன்மை கல்வி அலுவலர்கள் பணி இடமாற்றம் -கல்வித்துறை உத்தரவு
x

முதன்மை கல்வி அலுவலர்களை பணி இடமாற்றம் செய்து கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சென்னை,

தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனை சார்ந்த பணியிடங்களில் வரும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி பணி இடமாறுதல் வழங்கி நேற்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா அரசாணை பிறப்பித்துள்ளார். அதன்படி, 20 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர். அதன் விவரம் வருமாறு:-

திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி, ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனராகவும், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக துணை இயக்குனராகவும், விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராகவும், கோவை முதன்மை கல்வி அலுவலர் பூபதி, தொடக்கக்கல்வி துணை இயக்குனராகவும் (நிர்வாகம்), பெரம்பலூர் முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலராகவும் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

திருச்சி, கன்னியாகுமரி...

திருச்சி முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, திருப்பூர் முதன்மை கல்வி அலுவலராகவும், தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், திருச்சி முதன்மை கல்வி அலுவலராகவும், கன்னியாகுமரி முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, திருவாரூர் முதன்மை கல்வி அலுவலராகவும்,

சேலம் முதன்மை கல்வி அலுவலர் முருகன், கன்னியாகுமரி முதன்மை கல்வி அலுவலராகவும், புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், பெரம்பலூர் முதன்மை கல்வி அலுவலராகவும் இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது.

தென்காசி முதன்மை கல்வி அலுவலர் கபீர், சேலம் முதன்மை கல்வி அலுவலராகவும், கள்ளக்குறிச்சி முன்னாள் முதன்மை கல்வி அலுவலர் ஜி.சரஸ்வதி, திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலராகவும், திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலர் ராமன், விருதுநகர் முதன்மை கல்வி அலுவலராகவும்,

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக துணை இயக்குனர் ஆறுமுகம், ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனராகவும், தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மைய நிர்வாக அலுவலர் எம்.முத்தையா, தென்காசி முதன்மை கல்வி அலுவலராகவும் பணி இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

தஞ்சாவூர், ஈரோடு...

தொடக்கக்கல்வி துணை இயக்குனர் (சட்டம்) பாலதண்டாயுதபாணி, தஞ்சாவூர் முதன்மை கல்வி அலுவலராகவும், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் எம்.மஞ்சுளா, புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலராகவும், ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனர் எல்.சுமதி, கோவை முதன்மை கல்வி அலுவலராகவும், ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனர் ஜெ.ஏ.குழந்தைராஜன், ஈரோடு முதன்மை கல்வி அலுவலராகவும், தொடக்கக்கல்வி துணை இயக்குனர் (நிர்வாகம்) திருநாவுக்கரசு, தொடக்கக்கல்வி துணை இயக்குனராகவும் (சட்டம்) இடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை பிறப்பித்து உள்ளது.


Next Story